நான் இளம் வயதில் ஓடியாடி வேலை செய்யலாம். லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். ஆனால் வயதான பிறகு அன்றாட தேவைகளை சமாளிப்பதற்கு கூட பணம் இல்லாத சூழல் உருவாகும். எனவே கடைசி காலத்தில் அந்த பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு இப்போது இருந்தே நாம்  தயாராக வேண்டும்.  ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை கைக்கு வந்தால் அதை வைத்து ஓய்வு காலத்தை திட்டமிடலாம். அதற்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வருமானம் கிடைக்கும்.

இதில் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்லது 5 வருடம் முதலீடு செய்யலாம். இதில் தற்போது 8.1% லாபம் வட்டி லாபம் கிடைக்கிறது. கணக்கு வைத்திருப்பவர் 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். தனியாகவோ அல்லது மனைவியுடன் சேர்ந்து கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ஆயிரம் முதல் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் முதல் காலத்திற்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் கிடைக்கும் .அதே போல 2 லட்சம் முதலீடு செய்தால் 2,82,000 கிடைக்கும். 3 லட்சம் டெபாசிட் செய்தால் நான்கு லட்சத்தி 23 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஐந்து லட்சம் முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் அதாவது முதிர்வு  காலத்தில் 7 லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும்.