ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது. இந்த நோக்கத்திற்காக UIDAI அமைப்பும் ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளும் காலக்கெடுவை ஜூன் 14 ஆக நீட்டித்திருந்த நிலையில் தற்போது  மீண்டும் நீட்டித்துள்ளது. அதாவது மக்கள் தங்கள் ஆதார் ஆவணங்களை எந்த கட்டணமும் இன்றி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை புதுப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் அட்டையை புதுப்பித்தல்  ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது