இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் தற்போது ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் அட்டை மூலமாக வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் அரசின் நலத்திட்டங்கள் என பல வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நீங்கள் ஒரு வேலையில் சேர வேண்டும் என்றாலும் பள்ளி கல்லூரிகளில் சேர வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.

தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது சில மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் செயற்கை மற்றும் பிற சலுகைகள் மறுக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது எனவும் ஆதார் எண் இல்லாத காரணத்தால் குழந்தைகள் பெற வேண்டிய சலுகைகள் மற்றும் உரிய பலன்கள் மறுக்கப்படக்கூடாது எனவும் மற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.