பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் மதுபானக் கொள்கையையும் டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் திமுக அரசின் போக்கையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட 3000 ரூபாய் ஊக்கத்தொகை குறித்துப் பேசிய அவர், அரசு ஒரு கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் விற்பனை மூலம் சுமார் 518 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற நகைச்சுவை வசனத்தை மேற்கோள் காட்டி, அரசின் இந்தச் செயல்பாடு மக்களின் முன்னேற்றத்திற்குப் பதில் அவர்களை மீள முடியாத துயரத்திலேயே வைத்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.

மக்களின் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை விட டாஸ்மாக் வருமானத்திற்கே தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், மதுவினால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்தார்.

போதையில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, 24 மணி நேரமும் மது விற்பனைக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டிய அவர், இத்தகைய மக்கள் விரோத அரசு இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது.