முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும், கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருந்தாலும், தமிழக மக்கள் தன்னை நன்கு அறிவார்கள் என்பதால் களப்பணியில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் சசிகலா தன்னம்பிக்கையுடன் கூறினார்.
