மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் (MCU) மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படம், எம்பிசி வரலாற்றிலேயே மிக நீண்ட ஓடும் நேரம் (Run time) கொண்ட திரைப்படமாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ திரைப்படம் 3 மணி நேரமும் 1 நிமிடமும் ஓடி, எம்பிசியின் மிக நீளமான திரைப்படம் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருந்தது.

​தற்போது மார்வெல் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, தயாராகி வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் ஓடும் நேரம் தோராயமாக 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏராளமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும், பிரம்மாண்டமான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதால் இந்த நீளமான ரன் டைம் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி உண்மையாகும் பட்சத்தில், ‘எண்ட் கேம்’ சாதனையை முறியடித்து எம்சியு வரலாற்றில் புதிய மைல்கல்லை ‘டூம்ஸ்டே’ எட்டும் என்பதால் மார்வெல் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் தொற்றிக்கொண்டுள்ளது.