இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் தாம் தூம் , தலைவி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். பாஜக, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்த தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் மான்டி  தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.