தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த விஜய் ஆண்டனி சில நாட்கள் சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் ஆண்டனி தற்போது பெங்களூரு சென்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.