கான்பூரில் சந்தை பகுதியில் சிறுமி ஒருவரிடம் வாலால் செய்த சில்மிஷத்தால் ஆத்திரமடைந்த தாய், அந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கி பாடம் புகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அந்த இளைஞர் அநாகரீகமாக நடந்துகொண்டதால், ஆவேசமடைந்த அந்தப் பெண்மணி தனது காலணியால் அவரை அடித்து வெளுத்ததோடு, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் தக்க பாடம் புகட்டினார். இந்த

மேலும் தர்ம அடி மற்றும் போராட்டத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் கைபேசியில் படம்பிடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அத்துமீறுபவர்களுக்கு இது போன்ற உடனடி தண்டனை அவசியம் என்றும் நெட்டிசன்கள் இந்த தாயின் துணிச்சலான செயலைப் பாராட்டி வருகின்றனர்.

“>

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஈவ்-டீசிங் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.