மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டமான ‘லாட்கி பகின் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தேர்தலை ஒட்டி கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அவசர அவசரமாக செயல்பட்டதால் பயனாளர்களின் விவரங்களை சரியாக ஆய்வு செய்யவில்லை.
இதனால் பலர் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக நிதி உதவி பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து வருவாய்த்துறை ஆய்வு செய்ததில் 14 ஆயிரத்து 298 ஆண்கள் முறைகேடாக நிதியுதவி பெற்று வந்ததாக தெரிய வந்தது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில துணை- முதல் மந்திரி கூறுகையில், லாட்கி பகின் திட்டம்’ என்பது பெண்கள் உரிமைதொகை பெறும் திட்டம். இதில் முறைகேடு செய்து நிதியுதவி பெற்ற ஆண்களிடம் இருந்து அவற்றை திரும்பப் பெறுமாறு கூறியுள்ளார்.
இதுவரை இந்தத் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் 26 லட்ச பயணங்களுக்கு மேல் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர். இது குறித்து மந்திரி அதீதி தர்காரே தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, லாட்கி பகின் திட்டத்தில் பயனாளர்களின் விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
இது குறித்து வருமான வரித்துறையினடம் ஆய்வு செய்ததில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியில்லாத 26 லட்சத்திற்கும் மேலான பயணாளர்கள் நிதி உதவி பெற்று வந்தனர். இவர்களில் சிலர் இந்தத் திட்டத்தை தவிர வேறு சில திட்டத்திலும் நிதி உதவி பெற்று வந்தனர்.
எனவே அந்த பயணாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பின்பு அவர்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அதன் பின்பு தகுதி உள்ளவர்கள் நீக்கப்பட்டிருந்தால் அவர்களின் விவரங்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்படும் என மந்திரி கூறியுள்ளார்.
