இந்தியாவில் பல மாநிலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில், ரேபிஸ் நோய் தொற்று மிகவும் ஆபத்தானது என தெரிவித்தது. எனவே இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகமாக பரவி வருகிறது. இது ரேபிஸ் நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்திகளை நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்குமாறு தலைமை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
