கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு ராமச்சந்திரன் நாயர் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.  நேற்று காலை இவர் பபிதா என்ற பெண் புலி அடைக்கப்பட்ட கூண்டின் அருகே நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஆவேசம் அடைந்த புலி கூண்டின் அருகே நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனின் தலையை கம்பிகளுக்கிடையே இழுத்து பிடித்து கொண்டது. அப்போது ராமச்சந்திரன் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதில் சிறிது நேரத்திலே புலி அவரது விட்டது. ஆனால் ராமச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த வனத்துறை நிர்வாகிகள் உடனடியாக ராமசந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புலி தாக்கியதால் ராமச்சந்திரனின் தலையில் 4 தையல்களுக்கு மேல் போடப்பட்டுள்ளது. பின்பு ராமச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அந்த புலி சிறிது நாட்களுக்கு முன்புதான் வய நாட்டில் ஏற்பட்ட பெரிய விபத்தில் இருந்து மீட்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

இந்த பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட புலி தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.‌ திடிரென ஆவேசமடைந்த புலி ராமச்சந்திரனை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.