தமிழகத்தின் 14-வது முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதவியேற்பை மேற்கொண்ட போது, ஒட்டுமொத்த அரங்கமே உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கியது.

ஆளுநர் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, “C. ஜோசப் விஜய் எனும் நான்…” என்று அவர் தனது கணீர்க்குரலில் முழங்கிய தருணத்தில், அங்கிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் எழுப்பிய ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர், தனது மகன் அடைந்துள்ள இந்த உயரிய நிலையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கலங்கியது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகனாகத் தொடங்கி, இன்று மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் இந்த அரசியல் பயணம், அவரது பெற்றோரின் கண்களில் பெருமிதமாகவும், கண்ணீராகவும் வழிந்தோடியது அந்தப் பதவியேற்பு விழாவின் மிக முக்கியமான மற்றும் எமோஷனல் காட்சியாக அமைந்தது.