தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தனது பதவியேற்பு மேடையில் “ஒரு சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டருக்குப் பிறந்த பிள்ளையாக எனக்கு வறுமைன்னா என்னனு தெரியும்.. பசின்னா என்னனு தெரியும்” என்று கண்கலங்கப் பேசியது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் நெகிழச் செய்துள்ளது.

தான் ஒன்றும் ராஜ பரம்பரையில் இருந்து வரவில்லை என்றும், சாமானிய மக்களின் கஷ்டங்களை அடிமட்டத்திலிருந்து உணர்ந்தவன் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். வறுமையின் வலியைத் தெரிந்தவன் என்பதால், பசி இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே தனது லட்சியம் என்று முழங்கிய விஜய், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைச் சவால்களைத் தீர்க்கத் தமக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் 8 கோடி மக்களிடம் உரிமையோடு வேண்டுகோள் விடுத்தார்.

உணர்ச்சிப் பிழம்பாக அவர் ஆற்றிய இந்த முதல் உரை, மேடையில் இருந்த அவரது பெற்றோரை மட்டுமின்றி, அங்குக் கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.