பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவரது சார்பாக இந்த 3-வது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை புகார் அளித்தும் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தற்போதைய சூழலில் பாதுகாப்பு கோரி மீண்டும் முறையிட்டுள்ளதாக அந்த மனுவில் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல் பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
“என் மகனால் எனக்கு ஆபத்து..” – கதறிய ராமதாஸ் புகாரளித்த உதவியாளர் | Ramadoss | Anbumani | Kumudam News#KumudamNews24X7 #KumudamNews #anbumani #ramadoss #anbumaniramadoss #pmk #pattalimakkalkatchi #ramadosscry #anbumanithreaten #breaking #latestnews pic.twitter.com/wrp2U0xSgy
— Kumudam News 24×7 (@kumudamNews24x7) April 25, 2026
“>
