பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் அனிஸ் பாத்திமா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து ஆதாரங்களுடன் புகாரளித்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படாவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக…
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) April 24, 2026
“>
