கொல்கத்தாவில் காவல்துறையினரின் வாகனத்தின் மீது கல் வீசிவிட்டு ஓடிய இளைஞரை காவல்துறையினர் துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இந்த நகைச்சுவையான சூழலை மையமாக வைத்து, சமூக ஊடக உள்ளடக்கப் படைப்பாளரான ஷுபம் தக் என்பவர் ஒரு ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டார்.
மேலும் அதில் அந்த இளைஞரை தனது தந்தை என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டதுடன், தனது தந்தை ஒரு தீவிர ‘மோடி பக்தர்’ என்றும் பதிவிட்டிருந்தார். தற்செயலாக இந்த வீடியோ பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்குச் சென்றது. இந்த வீடியோவிற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் நகைச்சுவையாகவும் கனிவாகவும் கருத்து தெரிவித்தார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் “அந்த இளைஞரின் வேகத்தைப் பாராட்டுகிறேன், ஆனால் அவரது தந்தையை நான் வலியுறுத்துகிறேன் இதுபோன்ற சாகசங்களைச் செய்வதற்குப் பதிலாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்துமாறு அவரிடம் சொல்லுங்கள்” என்று பதிவிட்டார்.
மேலும் பிரதமரின் இந்த சமயோசிதமான மற்றும் நகைச்சுவையான பதில் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு சாதாரண இளைஞரின் வீடியோவிற்கு நாட்டின் பிரதமர் இவ்வளவு கலகலப்பாகப் பதிலளித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
