நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ் வகைகளில் முந்திரி முக்கியமானது. இவற்றின் தரத்தை எப்படி கண்டறிவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது நீங்கள் வாங்கக்கூடிய முந்திரியின் நிறம் மஞ்சளாக இருந்தால் அது போலியானது. அது வெள்ளையாக இருந்தால் நீங்கள் வாங்கலாம். அதுவே முந்திரிப் பருப்பில் துளைகள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். தரமான முந்திரிகளின் விலை சற்று உயர்வாக தான் இருக்கும். இவை எளிதில் கெட்டுப் போகாது. முந்திரிப் பருப்பின் அளவைக் கொண்டும் போலியான முந்திரியை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

அதாவது நல்ல தரமான முந்திரி என்றால் ஒரு இன்ச் நீளம் இருக்கும். ஆனால் அந்த அளவுக்கு கீழேயோ அல்லது அதிகமாகவோ இருந்தால் போலியான பருப்பு. முந்திரியை நுகரும்போது வாசனை ஆசையை தூண்டுவதாக இருந்தால் அது நல்ல முந்திரி. அதனைப் போலவே முந்திரியின் சுவையும் அதனுடைய தரத்தை அழகாக எடுத்துக்காட்டும். வாயில் ஒட்டாமல் இருந்தால் அது நல்ல முந்திரி. எனவே இனி முந்திரி வாங்கும் போது இதனை கவனித்து வாங்குங்கள்.