பொதுவாக அனைவருடைய வீட்டிலும் நாய் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு நாயை செல்லப் பிராணியாக வீட்டில் வளர்ப்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் நாய் வளர்ப்பது நோக்கம் என்னவென கேட்டால் பலரின் பதில் பாதுகாப்புக்காக என்பதாகத்தான் இருக்கும். ஆனால் நாய் வளர்ப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் என்று ஒரு ஆய்வில் இருதய நோய் வருவதற்கான ஆபத்து குறைவதாகவும் கூறப்படுகிறது.

நாய் உரிமையாளர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம், மன அழுத்தத்திலிருந்து சிறந்த ஆதரவு உள்ளதாக நாயை வைத்திருப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நாய்களால் மனிதர்களின் கடினமான நேரங்களை சமாளிக்க துணை புரிய முடியும். நெருக்கடியான நேரங்களில் மன ரீதியாக மீட்கும் சக்தி வளர்ப்பு நாய்களுக்கு உண்டு என்று கூறப்படுகிறது.