இந்துக்களுக்கு விபூதி என்றால் அதற்கு ஒரு தனி மரியாதை கொடுப்பார்கள். வழிபாட்டுத்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதமாகவும் உள்ளது. மிகவும் புனிதமாக பார்க்கப்படும். விபூதியை நெற்றியில் வைப்பது பழங்காலத்தில் இருந்தே பாரம்பரியமாக இருக்கிறது. தீய சக்தியிடம் இருந்து விபூதி பாதுகாப்பதாக ஒரு ஐதீகமும் உள்ளது. அக்குபிரஷர் படி நம் புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நரம்புகள் அமைந்துள்ளது. இவற்றை சிறிது மசாஜ் செய்து தலைவலியிலிருந்து விடுபடலாம். ஆதலால் விபூதி நெற்றியில் வைப்பதால் தலைவலி பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.

மேலும் எதிர்மறை ஆற்றல் உடலில் செல்வதை தடுக்கிறது. புராண ரீதியாக அறிவியல் ரீதியாக மூன்றாவது கண் ஆழ் மனம் என்று கூறப்படுகிறது. நெற்றியின் மையப்பகுதியில் விபூதி வைப்பது இதற்கு சமமாகும். நெற்றியில் விபூதி வைக்கும் போது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை நீக்குகிறது. உடம்பில் மந்த நிலை ஏற்பட்டால் அதை போக்கவும் கொடுக்கப்படுகிறது. இயற்கையாகவே உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை தூண்டி மீண்டும் அனைத்து ஆற்றல் சக்கரங்களையும் நேர்மறையாக செயல்பட வைக்கிறது.