உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய பேச்சு வார்த்தைகளையும் உக்ரைனோ ரஷ்யாவோ அல்லது மேற்கத்திய நாடுகளோ எடுக்கவில்லை.

இந்த நிலையில் சீனா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் 12 அம்ச அமைதி திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைனை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சீனா அழைத்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் சீனாவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “போர் நிறுத்தம் தொடர்பாக சீனா தான் ரஷ்யாவிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் ரஷ்யா ஒருபோதும் அணு ஆயுதம் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தாது” என அவர் கூறியுள்ளார்.