கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின்தலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நிஷா, அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக் காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு இருவரும் குழித்துறையில் தனியாக வசித்து வந்த நிலையில், நிஷாந்த் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நிஷா தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிஷா, தான் ஆசையாகக் காதலித்து மணம் முடித்த கணவர் தன்னை அலட்சியப்படுத்துவதாகக் கருதி விரக்தியில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த களியக்காவிளை போலீசார், நிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
