பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற போதை ஒழிப்பு மையத்தில், சுமார் 40 நோயாளிகள் திடீரென ஒன்றிணைந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மையத்தின் கதவுகளை உடைக்க முயன்றும், பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் அவர்கள் வெளியேறத் துடித்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
மேலும் முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என்ற அதிருப்தி அல்லது மையத்தின் கடுமையான கட்டுப்பாடுகளே இந்தத் தப்பியோடும் முயற்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மையத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களின் துரிதமான செயல்பாட்டால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
35 to 40 patients admitted to Drug Relief-addiction center in #Mohali attacked doctors and security staff and attempted to escape. ❗ pic.twitter.com/zlDPtyaHhe
— Siraj Noorani (@sirajnoorani) February 10, 2026
“>
இந்நிலையில் நோயாளிகள் பிரதான வாயிலை எட்டுவதற்கு முன்பாகவே பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தற்போது அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், இந்தத் திட்டமிட்ட முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
