சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 மற்றும் தலைவர் 173 உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெய்லர் மற்றும் கூலி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 173-வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இளம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இவர் ஓ மை கடவுளே மற்றும் டிராகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவருக்கு ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 173 படத்தின் அப்டேட் வெளியான நிலையில் இன்று டைட்டில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது படக்குழு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மாஸான கெட்டப்பில் இருக்க தர்மன் என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது தலைவர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
