தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்திருந்த நிலையில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி அமேசான் பிரைம் தளத்தில் பிப்ரவரி 22-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாகிறது. இந்த அறிவிப்பு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.