தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கூலி படம் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் டிரெய்லர் இன்று 7 மணிக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி சற்று முன் கூலி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.