தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் அழுத்தமான நடிப்பால் பெயர்பெற்ற மூத்த நடிகர் மதன் பாப் (வயது 71), கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 2) மாலை 5 மணி அளவில் சென்னையில் காலமானார்.
அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
