தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும். அதாவது இந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் நிலையில் இவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது.

இருப்பினும் சில கல்லூரிகள் இந்த மாணவர்களிடம் வற்புறுத்தி அனைத்து விதமான கட்டணங்களையும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெறும் மாணவ மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. மேலும் இதனை மீறும்  பொறியியல் கல்லூரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.