சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக பொருளாதார வளர்ச்சியை சரிவடைய செய்தது. இதில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 2022 -ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் சீனா 3 சதவீத அளவிற்கு சுருங்கிப் போய் உள்ளது. இது கடந்த 50 வருடங்களில் காணப்பட்டுள்ள இரண்டாவது மோசமான பொருளாதார வளர்ச்சியாகும். சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 2022 -ஆம் ஆண்டில் 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது அதிகாரப்பூர்வ இலக்கான 5.5 சதவீதத்திற்கு குறைவாகும்.

இது குறித்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான சரிவை கொண்டிருப்பதற்கான காரணம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஜீரோ கோவிட்  பாலிசி என்னும் பெயரில் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளும் பொது முடக்கம்தான் என கூறப்படுகிறது. மேலும் 1974 -ஆம் ஆண்டு சீனாவில் மிகக் குறைந்த அளவாக 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.