தமிழக அரசியல் களத்தில் 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தைத் திமுகவின் அழுத்தத்தால்தான் கொண்டு வந்ததுபோல முதல்வர் ஸ்டாலின் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “திமுக ஆட்சியில எதுவும் செய்யாம, நாங்க செஞ்சதை அவங்க செஞ்சதா விளம்பரம் பண்ணிக்கிறாங்க” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

​மேலும், “பொய்யாலும், வீண் விளம்பரத்தாலும் உயர்ந்தவர்கள் ஒருபோதும் நிலைக்கமாட்டார்கள்” என்று தத்துவத்தோடு முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உண்மையை முதல்வர் உணரும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும் என்றும், மக்கள் இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவின் திட்டங்களைத் திமுக தன் கணக்கில் சேர்த்துக்கொள்வதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய அனலைக் கிளப்பியுள்ளது.