நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் தமிழக பட்ஜெட்டில் திமுக அரசு போய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு அப்படியே காப்பி அடித்துள்ளது என்றும் புதிதாக எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டுக்கு மட்டும் 2.50 லட்சம் கோடி கடன் சுமை தமிழக அரசுக்கு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.