முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் ஆபாசமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பாலியல் தொழிலாளி பெண்களின் உடலுறவை சைவம் மற்றும் வைணவ மதங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசிய நிலையில் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது வந்த தகவலின் அடிப்படையில் பொன்முடிக்கு பதிலாக 2026-ல் அவரது மகன் கௌதம் சிகாமணியை திருக்கோவிலூர் பொது தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
