கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் மக்களை சந்திக்காமல், எந்தவிதமான தெளிவான அரசியல் விளக்கமோ பொறுப்பு ஏற்கும் செயல்களோ இல்லாமல் இருக்கின்றனர். விஜய் ஒரு வீடியோ மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்த பிறகு முழுமையாக மௌனத்தில் உள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் அதிகமாக விவாதிக்கப்படும் நபர், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவரை கைது செய்ய மூன்று தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டும், இவர் இன்னும் கைது செய்யப்படாததிலும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்களை மட்டும் அனுப்பியதிலும் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது பொதுமக்களிடையே மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரான சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு மீம்ஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “அனகொண்டா சிக்கும், அணில் சிக்காது” என்ற மரபு சொற்றொடருடன், புஸ்ஸி ஆனந்தின் முகத்தை அணில் உடலில் பொருத்தி சித்தரித்த அந்த மீம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரிடையே வியப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை கேலி, அரசியல் விமர்சனத்தை தாண்டி, பழிவாங்கும் நோக்கமாக இருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஆனால் மற்றுமொரு பக்கம், “தலைமை பொறுப்பேற்கவில்லை என்றால் கேலி, விமர்சனங்கள் தவிர்க்க முடியாது” என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
புஸ்ஸியை பிடிக்க மூன்று தனிப்படை !
அனகோன்டா சிக்கும்
அணில் சிக்காது ! pic.twitter.com/B4DWSevwYO— Duraimurugan (@Saattaidurai) October 3, 2025
