தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய தருணத்தில் மக்கள் மத்தியில் actor விஜய் பெரும் வரவேற்பைப் பெற்றார். பலரும் அவரது அரசியல் பயணத்தை எதிர்நோக்கி, ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், கழகத்துக்குள் இருந்து தொடர்ச்சியாக எழுந்துவரும் ஒரு முக்கியமான கோரிக்கை என்னவென்றால் – “விஜய் அவர்களின் சுற்றம், குறிப்பாக அவருடன் நிழல்போல இருப்பவர்கள், அவரது அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள்” என்பதே. இதில் முதன்மையாக குறிப்பிடப்படுவது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அவரைத் தவிர்த்து, நேர்மையான, பொறுப்புள்ள அணியுடன் விஜய் செயல்பட்டால் மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கை ஏற்படும் என்று கட்சிக்குள்ளேயே பலர் பெருமூச்சுடன் கூறி வருகின்றனர்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, புஸ்ஸி ஆனந்த் தைரியமாக எதிர்கொள்ளாமல் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய மூன்று தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடந்து வருகிறது. இந்த சூழலில், ஒரே கட்சியில் உள்ள ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “புஸ்ஸி ஆனந்தை கைது செய்தால், தேர்தல் முடியும் வரை அவரை வெளியே வர முடியாத வகையில், உரிய சட்டவழியில் வலுவான வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடுமையான கோரிக்கை வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சொந்தக் கட்சியின் ஒருவரே சொல்வதா என அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் 🙏
புஸ்ஸி ஆனந்தை கைது செய்தால் தேர்தல் முடியும் வரை வெளியில் வராத வகையில் வழக்கை வலுவாக அமைத்து கைது செய்ய வேண்டும் 🙏🙏 pic.twitter.com/zxCh04CJRd
— Mʀ.Exᴘɪʀʏ (@Jana_Naayagan) October 3, 2025
