கரூர் துயரச் சம்பவம் நடைபெற்று ஒருவாரமாகிவிட்டும், அதன் தாக்கம் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் குறையவில்லை. இதில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி மீது விமர்சனம் செய்யும் அளவில், ஆளும் திமுகவை விட நாம் தமிழர் கட்சி சார்ந்தவர்கள் அதிகமாக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களான சாட்டை துரைமுருகனும் இடும்புவனம் கார்த்தியும், இதைத் தங்கள் “முழுநேர பணி”யாக மாற்றி, தொடர்ந்து வீடியோக்களிலும் பதிவுகளிலும் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எதிராக தீவிரமாக கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இடும்புவனம் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகர் விஜயை “மரண வியாபாரி” என குறிப்பிட்டு, சித்தரித்து வெளியிட்டுள்ளார். இந்தக் கடுமையான புகைப்படம் விஜய் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் “அதிகரிக்கும் அரசியல் வன்மம்” குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது.
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) October 1, 2025
