
தமிழகத்தில் இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கிடைக்காத ரேஷன் அட்டைதாரர்கள் வருகின்ற ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே டோக்கன் பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. நாளையும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.