செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில்  நிரந்தரமாக இந்த மழை நீர் செல்வதற்கு தீர்வு காண வேண்டுமென்றால்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக இருக்கின்ற ரயில்வே அடிகளில் செல்லுகின்ற அந்த கல்வெட்டை,  புதிதாக கட்டுமான செய்ய வேண்டும்.

அந்த கட்டுமானத்தை நடத்துவதற்காக தென்னக ரயில்வே இடம்  கோரிய போது அவர்கள் 14 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.அந்தத் தொகையை இருவரும் 50 : 50% என்று செலவிட்டு கட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் வருகின்ற போது பாதுகாப்பு கருதி காவல் நிலையம் ஒன்றை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரிலே அறிவித்திருந்தார்.

அந்த காவல் நிலைய கட்டிடம் சுமார் 13 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இருக்கின்றது.  ஏற்கனவே ஒரு 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயணிகளுக்கு ஒரு அழகிய நீரோட்டத்தின் கூடிய பூங்காவை அமைத்திருக்கின்றோம். அதேபோல் காலநிலை பூங்கா 14 கோடி ரூபாய் செலவில் கிளாம்பாக்கத்தில் பணிகள் முடிவுறுகின்ற நிலையில் இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் இன்னொரு 50 ஆண்டுகள் கணக்கிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கிளாம்பாக்கத்திற்கென்று வருகின்ற  ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதற்காக…..   கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை உருவாக்குகின்ற ரூபாய் 20 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்குகின்றது.

அதோடு நிரந்தரமாக அங்கே நடை மேம்பாலம் அமைப்பதற்காக சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு நிலங்களை எடுக்கவும், அந்த நடை மேடையை SKY WALK அமைவதற்கு என்று ஒட்டுமொத்தமாகவும் 140 கோடி ரூபாயை செலவிட திட்டமிட்டு இருக்கின்றோம். இப்படி இன்னொரு 50 ஆண்டுகள் காலத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுவுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய நேரடி கண்காணிப்பில் பல்வேறு திட்டங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தீட்டு இருக்கின்றது. ஒரு புதிய வீடு  கட்டி குடி ஏறினால் கூட சிறு சிறு பிரச்சனைகள் அந்த வீட்டில் இருக்க செய்யும். அது போல் மக்களின் தேவைகள் அனைத்தும் இது புழக்கத்தில்…. பயன்பாட்டில் வருகின்ற போது தான் கிளாம்பாக்கத்தினுடைய முழு தேவைகளும் கண்டறிய பட முடிகிறது என தெரிவித்தார்.