பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை  ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன் கூடுதலாக 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 13 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,
சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. ஜனவரி 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் மொத்தம் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மட்டும் 4 நாட்களில் 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.