தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுதும் உள்ள அனைத்து தமிழர்களாலும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தோடு இன்று கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு மெரினா கடற்கரைக்கு சென்று பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் காவல்துறையினரோடு சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு வெயில், மழை பாராமல் மக்களை காக்கும் காவல்துறையினரோடு மண்ணை காக்கும் பொங்கல் விழாவினை கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களை காக்கும் காவலரை எந்நாளும் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.