நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இருப்பினும் பட்டாசுகள் வெடிக்கும் போது மிகவும் கவனத்துடன் அதனை கையாள்வது அவசியம். தமிழ்நாட்டில் கூட இன்று தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிவிபத்தால் 82 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் மற்றும் ஆண் பட்டாசுகளை எடுத்துச் சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஆந்திர மாநிலத்தில் இருவர் பைக்கில் பட்டாசுகளை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது பைக் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பட்டாசு வெடித்து சிதறியது. இதில் பைக் ஓட்டிய பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது.