தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வியில் இட ஒதுக்கீடு முதல் பேருந்துகளில் கட்டண சலுகை வரை அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏறிய இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வரை கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும். அதற்குப் பின்பு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு வசதியாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது பழைய பயண அட்டையை காட்டி பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.