பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்தின் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய போது விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.