துபாயில் நடைபெற்ற ஆடம்பர ஆடை (Fancy Dress) போட்டியில், இந்தியச் சிறுவன் ஒருவர் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா போல வேடமணிந்து கலந்து கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கமான @LovinDubai பகிர்ந்த இந்த வீடியோவில், சிறுவன் புர்ஜ் கலீஃபாவை ஒத்திருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட சிக்கலான உடையணிந்து மேடையில் தன்னம்பிக்கையுடன் நடமாடுவதை காணலாம். “தேசிய தினத்திற்கான ஆடை தீம் சொல்லப்பட்டபோது குழந்தை ‘நான் புர்ஜ் கலீஃபாவாக வருவேன்’ என்கிறான்!” என வீடியோவில் மேல் இடப்பட்ட வாசகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

 

உயரமான கட்டிடத்தின் வடிவம், லைட்டிங் எஃபெக்ட்கள் உள்ளிட்ட சிறப்பங்களைக் கொண்ட இந்த உடை நிகழ்வில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குழந்தையின் படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டினர்.

இதற்கிடையில், புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமும் அந்த வீடியோவுக்கு கைதட்டும் எமோஜி மூலம் அங்கீகாரம் தெரிவித்தது. இதனால் பதிவின் வரவேற்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் சிறுவனின் இந்த கற்பனையான வெளிப்பாடு பெற்றோர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நெட்டிசனர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.