பஞ்சாப் மாநிலம் குரலியில் பகல் நேரத்தில், தாத்தா மற்றும் பாட்டியின் கண் முன்னாலேயே நான்கு வயதுப் பெண் குழந்தை ஒன்று காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நெஞ்சைப் பிளக்கும் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் தவிப்பது போல, தங்களது செல்லப் பேத்தியைக் காப்பாற்ற முயன்று காரின் குறுக்கே வந்த வயதான தாத்தா, பாட்டியைப் பச்சாதாபமே இல்லாமல் கார் டிரைவர் ஏற்றித் தள்ள முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை உலுக்கியுள்ளன.
पंजाब के कुराली से एक दिल दहला देने वाली घटना सामने आई है. जहां पर एक साढ़े चार साल की बच्ची को दिनदहाड़े उसके दादा-दादी के सामने किडनैप कर लिया गया. बच्ची को बचाने के चक्कर में गाड़ी के आगे आए दादा दादी को भी कार चालक ने कुचलने का प्रयास किया. बच्ची के पिता के मुताबिक उसकी अपनी… pic.twitter.com/VzWRYe9kG5
— ABP News (@ABPNews) May 20, 2026
இந்த விவகாரம் குறித்துக் குழந்தையின் தந்தை போலீசில் அளித்துள்ள புகாரில் ஒரு அதிர்ச்சி திருப்பம் வெளிவந்துள்ளது. அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வருவதாகவும், குழந்தைகளின் உரிமை (Custody) யாருக்கு என்பது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தனது மனைவியே திட்டமிட்டு சில அடியாட்களை ஏவி, தாத்தா-பாட்டியைத் தாக்கி விட்டுத் தனது மகளைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தந்தை பலத்த சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இந்த புகாரின் பேரில், நீதிமன்ற வழக்கைக் கணக்கில் கொண்டு, கடத்தப்பட்ட குழந்தையைப் பத்திரமாக மீட்க பஞ்சாப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
