தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் விளைவால் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. என் நிலையில் நடப்பு கல்வியாண்டு ஏப்ரல் 28ஆம் தேதி உடன் முடிவடையும் நிலையில், 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை  ஏப்ரல் 17ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடங்க உள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க உள்ளார்.