சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் ஏப்ரல் 17 அதாவது இன்று முதல் ஏப்ரல் இருபதாம் தேதி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற முடியும். மேலும் மலைக்குச் செல்லும் பக்தர்கள் இரவில் தங்கவும்,எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.