அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த பெண் காவலர் கார்த்திகா ராணி (30). இவர் டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிறந்த கார்த்திகா ராணி, தனது 13 வயது மகள் மற்றும் 11 வயது மகனை பெற்றோரிடம் ஒப்படைத்து, சென்னையில் தனியாகவே வாழ்ந்து வந்தார். அவருடைய கணவர் மணிகண்டன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவரை பிரிந்து சென்றதாக தகவல். இதனால் குடும்ப பிரச்சினைகளால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை 4 மணியளவில், தாம் வசித்து வந்த வீட்டில் தூக்குபோட்டு உயிரிழந்த நிலையில் கார்த்திகா ராணி கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் டி.பி. சத்திரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
காவலர் கார்த்திகா ராணி தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சினையால்தானா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அவரின் செல்போன் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. யாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பதும் போலீசாரால் ஆய்வு செய்யப்படுகிறது.
மேலும், கார்த்திகா ராணியுடன் பணிபுரிந்து வந்த சக பெண் காவலர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் கொடைக்கானலில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் சென்னைக்கு வந்தனர்.மேலும் ‘]=-‘]=-‘]=-‘]=-‘]=-‘]=-‘]=- பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
