
பாமக கட்சியின் நிர்வாகி மறைவுக்கு தற்போது அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் டி.கே.இராசா அவர்களின் சகோதரரும், திருப்பத்தூர் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளருமான டி.கே. பூபதி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
டி.கே. பூபதியின் குடும்பமே பாட்டாளி மக்கள் கட்சி குடும்பம் ஆகும். அவரது மனைவி, சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். டி.கே. பூபதியும் பாட்டாளி மக்கள் கட்சியில் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட வகித்தவர் ஆவார். கட்சிக்காக உழைத்த அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
டி.கே.பூபதி அவர்களை இழந்து வாடும் அவரது சகோதரர் டி.கே.இராசா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.