தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனரும், தொல்லியல் அறிஞருருமான மா.சந்திரமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவமான அடையாளங்களை சந்திரமூர்த்தி கண்டறிந்துள்ளார்.

நேற்று முன்தினம் மூச்சுதிணறல் காரணமாக சந்திரமூர்த்தி உயிரிழந்தார். அவரது உடல் போரூரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று பொதுமக்களும் உறவினர்களும் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.