உலகில் சிங்கம் அல்லது புலி ஆகியவற்றின் பால்தான் மிகவும் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், வியப்பூட்டும் விதமாக எலியின் பால்தான் உலகின் மிக விலையுயர்ந்த பாலாகக் கருதப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலிகள் மிகச் சிறிய உயிரினம் என்பதால், அவற்றிடமிருந்து பால் கறப்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான காரியமாகும்.
இதனால் ஆய்வகங்களில் விஞ்ஞானிகள் அதிநவீன நுண் இயந்திரங்களின் உதவியுடன் மட்டுமே இதைப் பிரித்தெடுக்கின்றனர். ஒரு லிட்டர் எலிப்பாலைச் சேகரிக்க தோராயமாக 4,000 எலிகள் தேவைப்படுகின்றன; ஏனெனில் ஒரு எலியிடமிருந்து ஒரு நேரத்தில் ஒரு சிறிய ஸ்பூன் அளவிற்குக் கூட பால் கிடைப்பதில்லை.
இந்த பால் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு அதன் மருத்துவக் குணங்களே முக்கியக் காரணமாகும். எலியின் பாலில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் நிறைந்துள்ளன. இவை மனித ஆரோக்கியத்திற்கும், மருத்துவ ஆராய்ச்சித் துறைக்கும் மிகவும் அவசியமானவையாகக் கருதப்படுகின்றன.
இது குறிப்பாக புற்றுநோய் ஆராய்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆய்வுகள் மற்றும் புதிய மருந்துகளை உருவாக்குவதில் இந்த பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழுதைப் பால் மற்றும் குதிரைப் பால் போன்ற மற்ற விலையுயர்ந்த பால்களுடன் ஒப்பிடும்போது, எலியின் பால் அதன் அரிய பயன்பாட்டினால் உலகின் மிக விலையுயர்ந்த பாலாக முதலிடத்தில் உள்ளது.
